முகப்பு
இந்தியா

கனிமவள உரிமத் தொகையை மாநில அரசுகள் வசூலிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

கனிமவள உரிமத் தொகையை மாநில அரசுகள் வசூலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 6:19 AM
 உச்ச நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: கனிமவள உரிமத் தொகையை மத்திய அரசிடம் இருந்து வசூலிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

2005 முதல் மத்திய அரசு, குத்தகைதாரர்கள் வசூலித்த தொகையை மாநில அரசுகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில், தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பும், ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பும் வழங்கினார்.

அடுத்த 12 ஆண்டுகளுக்கு தவணை முறையில் நிலுவைத் தொகையை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கனிமவள நிலம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே, கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உரிமத் தொகை வசூலித்துக்கொள்ள இன்று அனுமதி வழங்கியிருக்கிறது.

கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →