சுக்விந்த்ர் குமார் சுகி 
இந்தியா

ஆம் ஆத்மியில் இணைந்தார் அகாலி தள எம்எல்ஏ!

தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக எப்போதும் உழைத்தவர் சுகி..

பிடிஐ

சிரோமணி அகாலி தளத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இரு முறை எம்எல்ஏவாக இருந்த சுக்விந்தர் குமார் சுகி ஆம் ஆத்மியில் இணைந்தார்.

சுக்விந்தர் குமார் சுகி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக எப்போதும் உழைத்ததாகக் கூறிய மான் சுகியை கட்சிக்கு வரவேற்றார்.

இந்த நிகழ்வின்போது ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான சந்தீப் பதக்கும் கலந்துகொண்டார்.

மருத்துவரான சுகி கடந்த 2017ஆம் ஆண்டு எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில் உள்ள பங்கா சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின்னர் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் சிரோமணி அகாலி தளத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT