ஜார்கண்ட்: காணாமல் போன குழந்தைகள் சடலங்களாக மீட்பு!
மர்மமான முறையில் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை
ஜார்கண்டில் காணாமல்ப் போன குழந்தைகள், குளத்திலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.
ஜார்கண்டின் டியோகர் மாவட்டத்தில் ஆக. 15, வியாழக்கிழமையில் 8,9 வயதுடைய மூன்று குழந்தைகள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, அவர்களது பெற்றோர் தேடி வந்துள்ளனர்.
ஆனால், தேடியும் கிடைக்காததால், அவர்கள் சோனாரைதாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகளை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், இன்று (ஆக. 16) அப்பகுதியில் இருந்த ஒரு குளத்தில், காணாமல் போன குழந்தைகள் இறந்த நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, டியோகர் துணைப்பிரிவு காவல் அதிகாரி ரித்விக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.