இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட உயரும் என்று ஐஎம்எஃப் துணை நிர்வாக இயக்குனர் டாக்டர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்  
இந்தியா

உலகின் 3 ஆவது பொருளாதார நாடாக இந்தியா 2027-ல் உயரும்: சர்வதேச நாணய நிதியம்

மத்திய அரசின் கணிப்பைவிட பொருளாதார வளர்ச்சி உயரும் என்று கருத்து

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில் மத்திய அரசு கணித்ததைவிட பொருளாதார மாற்றம் அதிகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல்வேறு காரணிகளால் உந்தப்பட்டு, எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் டாக்டர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.

கீதா கூறியதாவது, ``கடந்த நிதியாண்டில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட, இந்தியாவின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது; கடந்தாண்டின் எங்கள் கணிப்பின் விளைவுகள், இந்த ஆண்டிற்கான கணிப்பையும் பாதிக்கின்றன.

இந்தியாவின் கிராமப்புறங்களிலும், நுகர்வு நிலைகள் மறுமலர்ச்சி பெற்றுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.

மற்றொரு காரணியாக, தனியார் நுகர்வு மீண்டு வருவதையும் காண்கிறோம்.

பல்வேறு காரணிகளால் உந்தப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது.

எஃப்எம்சிஜி, இருசக்கர வாகன விற்பனைக்கான புதிய தரவு, சாதகமான பருவமழை ஆகியவற்றின் அடிப்படையில், 2024 - 25 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவிகிதமாக உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார ஆய்வு அளித்த 6.5 சதவிகிதக் கணிப்பைவிட அதிகமாகும். 2027 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

SCROLL FOR NEXT