தில்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் dotcom
இந்தியா

அடுத்த தலைவர் யார்? பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!

தில்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

தில்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாஜகவின் தலைவராக இருந்த ஜெ.பி.நட்டா, தற்போதைய அரசின் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனால் பாஜக தேசிய தலைவர் பதவி காலியாக உள்ளது. எனினும் இன்று மாலை தொடங்கியுள்ள பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஜெ.பி. நட்டா தலைமை தாங்குகிறார்.

இந்த கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வது அல்லது செயல் தலைவரை நியமனம் செய்வது குறித்து பேசப்படலாம் என்று தெரிகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கை எப்போது தொடங்குவது என்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

மேலும் ஹரியாணா, ஜம்மு-காஷ்மீருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்தும் அந்தந்த மாநில பொறுப்பாளர்களிடம் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கூட்டத்தில், தேசிய நிர்வாகிகள், மாநில கட்சித் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் பாஜகவின் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT