அகிலேஷ் யாதவ் 
இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: பாஜக அரசியல் செய்யக் கூடாது

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

DIN

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறது மம்தா அரசு என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே கொல்கத்தா சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்க காவல்துறை இந்த வழக்கை விசாரித்த நிலையில் சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் தற்போது இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை பாஜக அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "மம்தா பானர்ஜி பெண் என்பதால் ஒரு பெண்ணின் வலி அவருக்கு புரியும். அவர் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனம், மருத்துவர் மீது வழக்குப் பதிவு

பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவா் கைது

தண்டரை ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை

3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1

SCROLL FOR NEXT