கோப்புப் படம் 
இந்தியா

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து! இந்து மதத் தலைவர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிரத்தில் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேசிய இந்து மதத் தலைவர் மீது வழக்குப்பதிவு

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரத்தில் மத நிகழ்ச்சியில், இஸ்லாம் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறிய ராம்கிரி மஹாராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷா பஞ்சலே கிராமத்தில், இந்து மதத் தலைவர் ராம்கிரி மஹாராஜ் தலைமையில் ஆன்மீகக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முகமது நபி, இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துகளை, ராம்கிரி கூறியுள்ளார். இந்த நிகழ்வு தொடர்பான விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இஸ்லாம் மதத்தின் மீதான ராம்கிரியின் கருத்துகளால், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மதங்களிடையே பகைமையை ஊக்குவித்தல், சமாதான உணர்வை வேண்டுமென்றே அவமதிப்பது, குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் ராம்கிரி மஹாராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ராம்கிரி மஹாராஜ், "இந்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எது வந்தாலும் நான் எதிர்கொள்வேன்" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT