விநாயகர் சிலைகள் 
இந்தியா

புவனேஸ்வரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு புதிய கட்டுப்பாடு!

நாடு முழுவதும் செப்டம்பர் 7-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகின்றது.

PTI

புவனேஸ்வரம் மற்றும் கட்டாக்கில் விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாட்டங்களின்போது டிஸ்க் ஜாக்கி (பதிவு செய்த பாடல்கள்) பயன்படுத்தத் தடை விதித்து காவல்துறையினர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

நாடு முழுவதும் செப்டம்பர் 7-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகின்றது. புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் பூஜை அமைப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரு கூட்டங்களிலும் சிலை கரைப்பு ஊர்வலங்கள் உள்ளிட்ட பூஜைகளின்போது டிஜே இசையைப் பயன்படுத்த வேண்டாம் என அமைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கட்டாக்கில் சிரை கரைப்பு விழா செப்டம்பர் 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஏழு நாள்களுக்கு முன் உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என பூஜை குழுக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், புவனேஸ்வரத்தில் செப்டம்பர் 8, 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

விநாயக பூஜை குழுவினர் டிஜே இசையை இசைக்க வேண்டாம் என்றும், டிஜேவுக்குப் பதிலாகப் பாரம்பரிய இசைக்கருவிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மக்களிடம் வலுக்கட்டாயமாக நன்கொடை வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

பூஜையின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு தலைநகரில் போதிய எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்களை காவல் துறையினர் நிறுத்துவார்கள் என்று கட்டாக் மற்றும் புவனேஸ்வர் காவல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் டிஜே நிறுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இதற்குத் தடை விதிக்கக் கோரி டிஜே உரிமையாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT