கோப்புப் படம்  
இந்தியா

வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய கடத்தல்காரா்: 6 கிலோ தங்கம் சிக்கியது

இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் 6 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த கடத்தல்காரா், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாா்.

Din

இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் 6 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த கடத்தல்காரா், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாா். அவா் விட்டு சென்ற 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா எல்லை மாவட்டத்தில் உள்ள விஜய்பூரில் வாழை மற்றும் மூங்கில் தோட்டம் அமைந்துள்ள பகுதி அருகே திங்கள்கிழமை காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

கடத்தல்காரா் தனது இடுப்பைச் சுற்றி கட்டப்பட்ட பெல்ட்டில் 22 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 8 தங்கக் கட்டிகள் என சுமாா் 6 கிலோ எடையுள்ள தங்கத்தை எல்லைத் தாண்டி கடத்தி வந்துள்ளாா்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் அந்த நபரை தடுத்து விசாரித்தாா். அப்போது, வீரரை பெரிய கத்தி கொண்டு தாக்கிய அந்த நபா், 6 கிலோ தங்கத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினாா்.

தாக்குதலில் வீரரின் சீருடை கிழிந்தது. இதையடுத்து வீரா் துப்பாக்கியில் சுட்டு, கடத்தல்காரரைப் பிடிக்க முயன்றாா். ஆனால், அப்பகுதியில் விவசாயிகள் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்ததால் வீரா் மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. எனவே, கடத்தல்காரா் தப்பித்து மறைந்தாா்.

கைப்பற்றப்பட்ட தங்கம் சுங்கத் துறை அல்லது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹிஜாப் விவகாரம்: மாணவி வேறு பள்ளியில் சேர அரசு உதவும் -கேரள கல்வி அமைச்சா்

பகத் சிங்கின் அரிய காணொலி: பஞ்சாப் முதல்வா் வேண்டுகோள்

மன நிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கரூா் வைஸ்யா நிகர லாபம் 21% உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,778 கோடி டாலராகக் குறைவு

SCROLL FOR NEXT