நாட்டிலேயே சிறந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா பாராட்டியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்வில் உரையாற்றிய துணை முதல்வர், மாநிலத்தில் "இரட்டை இன்ஜின்" அரசு நாட்டிலேயே சிறந்த பணிகளைச் செய்து வருவதாகக் கூறினார்.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டில் சிறந்த பணிகளை இரட்டை இன்ஜின் அரசு செய்து வருகிறது என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். பிரதமர் மோடி போன்ற தலைவர் உலகில் வேறு யாராவது இருக்கிறார்களா? யோகி ஆதித்யநாத் போன்று வேறு யாராவது நாட்டில் இருக்கிறார்களா?
உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி இருக்கும்போது, நாட்டிலேயே சிறந்த முதல்வராக யோகி உள்ளார். எனவே பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த ஜூலையில் அவரின் எக்ஸ் பதிவில், அரசாங்கத்தை விட அமைப்பு பெரியது. தொழிலாளர்களின் வலி எனது வலி, அமைப்பை விட யாரும் பெரியர்கள் அல்ல என்று பதிவிட்டிருந்தார்.
உ.பி. துணை முதல்வருடன் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த செவ்வாயன்று சந்திப்பு நடத்தினார். மேலும். உ..பி.யின் பாஜக தலைவருடன் நட்டா தனியாக சந்திப்பு நிகழ்த்திய நிலையில் இந்த சுட்டுரைப் பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
மௌரியா இரண்டாவது முறையாக மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். கடந்த 2017ல் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக 312 இடங்களைப் பெற்று பேரவையில் பெரும்பான்மை அரசு அமைத்தபோது அவர் மாநில பாஜக தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.