முகப்பு
கொல்கத்தா கொடூரம்
இந்தியா

கொல்கத்தா சம்பவத்தில் உண்மை கண்டறியும் சோதனையின் முக்கியத்துவம் என்ன?

கொல்கத்தா சம்பவத்தில் உண்மை கண்டறியும் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா

கொல்கத்தா சம்பவத்தில் உண்மை கண்டறியும் சோதனையின் முக்கியத்துவம் என்ன?

கொல்கத்தா சம்பவத்தில் உண்மை கண்டறியும் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 10:09 AM
கொல்கத்தா கொடூரம்
பகிர்:

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், கைதாகியிருக்கும் சஞ்சாய் ராய்க்கு சிபிஐ அதிகாரிகள் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல்துறையின் தன்னார்வலராக செயல்பட்டு வந்த சஞ்சய் ராய் என்பவர் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளிக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுவதால், இது தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

33 வயதாகும் சஞ்சய் ராய், பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த நாள் கைதானார். சம்பவம் நடந்த அன்று, அதிகாலை 4 மணிக்கு, அவசரகால சிகிச்சைப் பிரிவு இயங்கும் கட்டத்துக்குள் அவர் நுழைந்திருப்பது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. அப்போது அவர் காதில் வைத்திருந்த ப்ளூடூத், பலியான மருத்துவரின் உடல் அருகே கண்டெடுக்கப்பட்டதை அடிப்படையாக வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் தற்போது சிபிஐ காவலில் இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே மனநிலை தொடர்பான பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் சில கேள்விகளை கேட்கும்போது, இவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களை, உண்மை கண்டறியும் சோதனைக் கருவி பதிவு செய்யும். அதாவது, ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, அவரது இதயம் துடிக்கும் வேகம், மூச்சு விடுவதில் மாற்றம், வியர்வை ஏற்படுவது, ரத்த அழுத்தம் என அனைத்தும் பதிவாகும்.

அதற்கு முன்பு, அவர் பொதுவாக சில கேள்விகளுக்கு பதிலளிப்பார். அப்போது அவரது உடல் நிலையின் இயல்பு அளவுகள் குறிப்பெடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு கேள்விக்கும் அளிக்கும் பதில்களின்போது, குற்றம்சாட்டப்பட்டவரின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், நகரும் காகிதத்தில் குறிப்பாகப் பதிவு செய்யப்படுகிறது.

இதன் மூலம், சஞ்சய் ராய் சில முக்கிய கேள்விகளுக்கு உண்மையை சொல்லியிருக்கிறாரா என்பது ஆராயப்படும். இதுவரை அவர் சொன்ன தகவல்களை அடிப்படையாக வைத்தே விசாரணை மற்றும் சோதனைகள் நடந்து வரும் நிலையில் அவர் சொன்ன தகவல்கள் உண்மையா அல்லது பொய்யானவையா என்பது கண்டறியப்படும். இதன் மூலம், சிபிஐ இதுவரை எதிர்கொண்டு வந்த பல சவால்களுக்கு விடை கிடைக்கும் அல்லது சரியான பாதையில் விசாரணையைக் கொண்டு செல்ல வழி பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →