புதுதில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தி புகைப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாள் இன்று(ஆக. 20) கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மத்திய அரங்கில் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, கொட்டும் மழையில் நனைந்தபடி ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு சென்று ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.