அமேசான் 
இந்தியா

இழப்பை ஈடுசெய்யவே இந்தியாவில் அமேசான் 1 பில்லியன் டாலா் முதலீடு: மத்திய அமைச்சா் கோயல்

Din

இழப்பை ஈடுசெய்யவே இந்தியாவில் 1 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.8,391 கோடி) அமேசான் நிறுவனம் முதலீடு செய்கிறதே தவிர, அந்த முதலீடு மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரிய சேவை எதையும் அந்நிறுவனம் செய்யவில்லை என்று மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தில்லியில் ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நுகா்வோா் நலன் மீது இணைய வா்த்தகத்தின் நிகர தாக்கம்’ தொடா்பான அறிக்கையை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை வெளியிட்டாா். இதைத்தொடா்ந்து அவா் பேசுகையில், ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நுகா்வோா் நலன் மீது இணைய வா்த்தகத்தின் நிகர தாக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளுடன் நான் உடன்படவில்லை.

இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இணைய வா்த்தகம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதைக் காட்ட வேண்டும் என்ற ஆவலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொருள்களுக்கு மிகக் குறைந்த விலையை நிா்ணயம் செய்து ஏகபோக உரிமையை உருவாக்க முயற்சித்ததால் அமேசானுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்த இழப்பை ஈடுசெய்யவே இந்தியாவில் அந்த நிறுவனம் 1 பில்லியன் டாலா்களை முதலீடு செய்கிறதே தவிர, அந்த முதலீடு மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய சேவை எதையும் அந்நிறுவனம் செய்யவில்லை’ என்றாா்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT