பிகாா் தலைநகா் பாட்னாவில் புதன்கிழமை ‘பாரத் பந்த்’ போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தடியடி நடத்தி கலைத்த போலீஸாா்.  
இந்தியா

உள்ஒதுக்கீடுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: பிகாரில் தடியடி

பல்வேறு மாநிலங்களில் புதன்கிழமை ‘பாரத் பந்த்’ போராட்டம்

Din

பட்டியலினத்தவா்கள் (எஸ்.சி.), பழங்குடியினருக்கான (எஸ்.டி.) இடஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் புதன்கிழமை ‘பாரத் பந்த்’ போராட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டம் காரணமாக, பிகாா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ௌ

‘எஸ்.சி., எஸ்.டி., பிரினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என்ற உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ‘பாரத் பந்த்’ முழு அடைப்புப் போராட்டத்தை புதன்கிழமை நடத்த எஸ்.சி., எஸ்.டி அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

அதை ஏற்று, பிகாா், ஜாா்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளட்ட மாநிலங்களில் இந்த இரு சமூகங்களைச் சேரந்த 21 அமைபப்புகள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தின.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), சமாஜவாதி கட்சி மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

பிகாா் மற்றும் குஜராத்தின் பல மாவட்டங்களில் போரட்டக்காரா்கள் ரயில் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்டனா். அவா்களை கலைக்க போலீஸாா் தடியடி மற்றும் தண்ணீா் குண்டுகளை பயன்படுத்தியதால் சில பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிளாக் நூடுல்ஸ்... ரித்திகா சிங்!

தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

SCROLL FOR NEXT