முகப்பு
இந்தியா

நடுவானில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரளம் வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 10:15 AM
கோப்புப் படம்
பகிர்:

கேரளம் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

மும்பையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு 135 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் 657, திருவனந்தபுரத்தை நெருங்கியபோது, காலை 7.30 மணியளவில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக, விமானியால் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, காலை 7.36 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

Advertisement

இருப்பினும், காலை 8 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, காலை 8.44 மணியளவில் பயணிகள் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஏர் இந்தியா விமானம், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விமான நிலையம் எப்போதும் போல செயல்பட்டு வருவதாகவும், விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.