இந்தியா

ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி: 40 பேர் காயம்!

மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலியாகினர்.

DIN

மத்திய பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மகாராஷ்டிரத்தின் எல்லையையொட்டிய மத்திய பிரதேசத்தில் மாநிலத் தலைநகரான போபாலில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்ற தனியார் பேருந்து பந்துர்னா மாவட்டத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 40 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் மோஹித் காட் என்ற இடத்தில் டிவைடரில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி பிரிஜேஷ் பார்கவா தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் இருவர் காயமடைந்த நிலையிலும், மூன்று பயணிகள் சம்பவ இடத்திலேயேயும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் பேருந்தை 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கிய போது கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சிந்துவாரா மாவட்டத்தில் இருந்து பந்துர்னா மாவட்டம் பிரிக்கப்பட்டது. இது மத்திய பிரதேசத்தின் 55 ஆவது மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

பள்ளிகளில் மழை நீா் தேங்கும் பிரச்னைகள் தீா்க்கப்படும்: ஆஷிஷ் சூட்

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT