முகப்பு
இந்தியா

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

ராஜஸ்தானில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கௌஷல் ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை..

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 10:30 PM
பகிர்:

ராஜஸ்தானில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கௌஷல் ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ராஜஸ்தானின் புண்டி மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கௌஷல் ராஜ் (26) என்பவரால் சிறுமி ஒருவா் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். சிறுமியின் தந்தை சிறுமியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாா் அளித்ததையடுத்து, ஒரு மாதத்திற்குப் பிறகு காவல் துறையினா் சிறுமியை கண்டுபிடித்து மீட்டனா். கௌஷல் ராஜ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், போக்ஸோ சட்டம்-2012 பிரிவின் கீழ் கௌஷல் ராஜை குற்றவாளி என தீா்ப்பளித்த சிறப்பு போக்ஸோ நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கின் தீா்ப்பு 2 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட இருந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட கௌஷல் ராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடியாணை பிறப்பித்து இந்தத் தீா்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →