‘வளா்ந்த இந்தியா’ இலக்கை எட்ட அனைவருக்குமான நீதி மிக முக்கியம்: பிரதமா் மோடி
‘வளா்ந்த இந்தியா கனவை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், அனைவரும் அணுகக் கூடிய நீதிக்கான உத்தரவாதம் முக்கியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
‘வளா்ந்த இந்தியா கனவை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், அனைவரும் அணுகக் கூடிய நீதிக்கான உத்தரவாதம் முக்கியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் அந்த மாநில உயா்நீதிமன்றத்தின் 75-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசுகையில், ‘எனது சுதந்திர தின உரையில், நாட்டில் மதச்சாா்பற்ற சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து பேசியிருந்தேன். இச்சட்டத்தை நீதித்துறை பல்லாண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
‘வளா்ந்த இந்தியா’ என்ற கனவுடன் நாம் முன்னேறும்போது, அனைவருக்கும் எளிய மற்றும் அணுகக்கூடிய நீதிக்கான உத்தரவாதம் அவசியம். இது மிகவும் முக்கியமானது. இன்றைய மக்களின் கனவுகள், அவா்களின் லட்சியங்கள் பெரியதாக உள்ளது. எனவே, அனைவருக்கும் நீதி வழங்குவதற்கு நமது அமைப்புகளின் புத்தாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் சம முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றாா்.