பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டாவுடன் கலந்துரையாடும் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத். 
இந்தியா

பிரதமராகும் கனவில் யோகி ஆதித்யநாத்! -அகிலேஷ் யாதவ் விமர்சனம்

யோகி ஆதித்யநாத் பிரதமரை போல செயல்படக்கூடாது -அகிலேஷ் யாதவ்

DIN

வெளியுறவு விவகாரங்களில் மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலையிடக் கூடாது என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆக்ராவில் இன்று(ஆக. 26) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், “வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்களா? அங்கே நடப்பது போன்ற தவறுகள் இங்கு அரங்கேறக் கூடாது. நாம் பிளவுபட்டால் துண்டிக்கப்படுவோம், ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்” என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் பேசியதை விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி செய்தியாளர்களுடன் பேசியபோது கூறியதாவது, “ஆதித்யநாத் பிரதமராக ஆசைப்படுகிறார். ஆனால், அதற்காக பிரதமரை போல செயல்படக்கூடாது. வங்கதேச விவகாரம் குறித்து பேசுவது பிரதமரின் பணி. நாம் எந்த நாட்டுடன் உறவைக் கடைபிடிக்க வேண்டுமென்பதை இந்திய அரசு தீர்மானிக்கும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுள் துகள்... சரண்யா ஷெட்டி!

ஓணம் சீசன்... ரவீனா தாஹா!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

முதல் ஒருநாள்: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 131 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!

SCROLL FOR NEXT