கேஜரிவால் (கோப்புப்படம்) DIN
இந்தியா

கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் செப். 3 வரை நீட்டிப்பு!

முதல்வர் கேஜரிவாலின் காவல் மீண்டும் நீட்டித்துள்ளது தில்லி நீதிமன்றம்.

பிடிஐ

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தேர்தலையொட்டி இடைக்கால ஜாமீனில் வெளியேவந்த அவர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கலால் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், இந்த வழக்கில் மத்திய புலனாப்வுப் பிரிவு(சிபிஐ) கைது செய்த நிலையில், திகார் சிறையில் உள்ள கேஜரிவால் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, திகார் சிறையில் காணொலிக் காட்சி வாயிலாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, சிபிஐ கேஜரிவாலுக்கு எதிராக தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா என்பது குறித்த வாதங்களை நீதிமன்றத்தில் தற்போது விசாரித்து வருகிறது. எனவே, கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT