சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய் ஷாவுக்கு இந்திய அணி வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா, புதிய ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூசிலாந்தைச் சேர்ந்த கிரெக் பார்க்லேக்கு பதிலாக அந்த பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய வீரர் விராட் கோலி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய் ஷாவுக்கு வாழ்த்துகள். நீங்கள் சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்”.
2019 முதல் 2022 வரை பிசிசிஐ தலைவராக பணியாற்றிய முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி, “ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய் ஷாவின் புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள். அவரது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்”.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, “ஜெய்ஷா, விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், உங்களுக்கு வாழ்த்துக்கள்!”
இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷான், “ஜெய் ஷா ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக வாழ்த்துகள், உங்களின் தொலைநோக்கு பார்வையும், திறமையும் கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்”.
இந்தியாவின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், “வாழ்த்துக்கள் ஜெய் ஷா. உங்கள் பார்வையால் கிரிக்கெட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ், “ஐசிசியின் இளம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் ஜெய்ஷா சார். உங்களின் கிரிக்கெட் மீதான தொலைநோக்கு பார்வை உலகளவில் கிரிக்கெட்டை விரிவுபடுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.