ஜெய் ஷா | அமித் ஷா | மமதா பானர்ஜி 
இந்தியா

ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு: அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த மமதா பானர்ஜி!

ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐஐசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, டிசம்பர் 1 ஆம் தேதி ஐசிசி தலைவராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ வாழ்த்துகள் மத்திய உள்துறை அமைச்சர்! உங்களது மகனை நீங்கள் அரசியல்வாதி ஆக்கவில்லை, அதற்கு பதிலாக அதைவிட முக்கிய பதவியான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஆக்கிவிட்டீர்கள். உங்கள் மகன் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராகிவிட்டார். அவரது இந்தச் சாதனைக்கு உங்களுக்குத் தான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும், பாராட்டுகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தினர் அநீதி இழைத்தனர்: ம.பி. முதல்வர் குற்றச்சாட்டு!

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

SCROLL FOR NEXT