தனியார் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!
பழுதான ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டபோது, கீழே விழுந்து விபத்து
பழுதான ஹெலிகாப்டரை பழுது பார்க்கக் கொண்டு செல்லப்பட்டபோது, கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
உத்தரகண்டில் பழுதான கிரிஸ்டல் நிறுவனத்தின் ஹெலிகாப்டரை, கேதார்நாத்திலிருந்து கௌச்சார் விமான நிலையத்திற்கு எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம், இன்று காலையில் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், சிறிது தூரம் சென்றவுடன், ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்று காரணமாக எம்ஐ-17 ஹெலிகாப்டர், தனது சமநிலையை இழக்கத் தொடங்கியது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, ஹெலிகாப்டர் தாரு முகாமுக்கு அருகில் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மண்டாகினி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இருப்பினும், கிரிஸ்டல் ஹெலிகாப்டரில் பயணிகளோ அல்லது சாமான்களோ எதுவும் இல்லாததால், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.