எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் TNIE
இந்தியா

அதானி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்..

DIN

அதானி லஞ்ச புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவை அலுவல்கள் முடங்கியுள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் செவ்வாய்க்கிழமை காலை பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நஜாஃப்கா் துப்பாக்கிச்சூடு வழக்கில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி கைது

பகவதியம்மன் கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT