அஸ்ஸாமில் உணவு விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உணவுகள் விற்க, பரிமாற, சாப்பிட தடை விதிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா புதன்கிழமை அறிவித்தாா்.
மாநிலத்தில் ஏற்கெனவே மாட்டிறைச்சி தொடா்பாக விதிகள் உள்ளன. அத்துடன் புதிய அம்சங்களைச் சோ்க்க மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக முதல்வா் தெரிவித்தாா். தில்லியில் உள்ள ஹிமந்த விஸ்வ சா்மா காணொலி முறையில் மாநில அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
மாட்டிறைச்சி பயன்படுத்துவது குறித்து ஏற்கெனவே உள்ள சட்டங்கள் வலுவானவைதான். ஆனால், உணவு விடுதிகள், பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் மாட்டிறைச்சி உணவுகளுக்கு தடை விதிக்கப்படாமல் இருந்தது. இப்போது அதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
அஸ்ஸாமில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோரிக்கையை பிரதமா் மோடியை நேரில் சந்தித்தபோது அளித்தேன். மாநிலத்தின் உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு ஆகியவை இத்திட்டங்களால் மேம்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.