மருத்துவர்கள் சாதனை 
இந்தியா

மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரகங்களில் கற்கள்: மாற்றி யோசித்த மருத்துவர்கள்

மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரகங்களில் கற்கள் இருந்தும் அதனை அகற்றிவிட்டு பொருத்தப்பட்டது

DIN

நொய்டா: காஸியாபாத்தில், மூளைச்சாவடைந்தவரின் 2 சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.

ஆனால், மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரகங்கள் இரண்டிலும் கற்கள் இருந்தும் கூட, அவற்றை உடலுறுப்பு தானமாகப் பெற மருத்துவர்கள் அனுமதி அளித்திருந்தனர்.

பொதுவாக அதுபோன்ற சிறுநீரகங்கள் உடலுறுப்பு தானத்துக்கு ஏற்றுக்கொள்ளபடாது என்றாலும் கூட, ஒரு சிறுநீரகத்தில் 4.5 செ.மீ.ம், மற்றொன்றில் 2.1 செ.மீ. அளவிலும் கற்கள் இருந்ததாலும் அவற்றை மிகவும் சிக்கலான செயல்முறைகளால், உடலுறுப்பு பொருத்தப்படுவதற்கு முன்பு அகற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான சாஹிபாப், 2 வாரங்களுக்கு முன்பு கடுமையான தலைவலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு இடையே அவர் மூளைச்சாவடைந்ததாக நவ. 28ல் மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.

உடனடியாக அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அவரது ஒரு சிறுநீரகம் 50 வயது முதியவருக்கும், மற்றொரு சிறுநீரகம் 52 வயது பெண்மணிக்கும் பொருத்தப்பட்டது. கல்லீரல் 60 வயது பெண்மணிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பொதுவாக மூளைச்சாவடையம் நபரின் உடலுறுப்புகள் கிடைப்பதே அரிது. பொதுவாக கற்கள் இருக்கும் சிறுநீரகங்கள் உடலுறுப்பு தானமாக பெறப்படுவதில்லை என்றாலும், இந்த சம்பவத்தில், மருத்துவர்கள் சற்று சிக்கலான நடைமுறையைப் பின்பற்றி சிறுநீரகத்தைப் பொருத்துவதற்கு முன்பு அதிலிருந்து கற்களை அகற்றிவிட்டு, நோயாளிகளுக்குப் பொருத்தி அவர்களது உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு

பூ வியாபாரியிடம் பணப் பையை திருடிய பெண் கைது

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

கடலாடி போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT