பாஸ்போர்ட் 
இந்தியா

பாஸ்போர்ட் சேவை மையங்கள் 600-ஆக அதிகரிக்க திட்டம்!

தபால் நிலையங்கள் மூலம் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

DIN

புதுதில்லி: தபால் நிலையங்கள் மூலம் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் எண்ணிக்கையை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதுள்ள 442-ல் இருந்து 600 ஆக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அஞ்சலகங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவையை 5 ஆண்டுகளுக்கு தொடர வெளியுறவு அமைச்சகமும், அஞ்சல் துறையும் தங்களது ஒத்துழைப்பை புதுப்பித்துள்ளன.

தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவைகளை தொடர்ந்து அணுகுவதற்காக வெளியுறவு அமைச்சகம் மற்றும் தபால் துறை இடையே ஐந்து ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

இதையும் படிக்க: அந்நிய நிதி முதலீடு வரத்தால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

ஒப்பந்தத்தில் வணிக மேம்பாட்டு இயக்குநரகத்தின் அஞ்சல் துறை பொது மேலாளர் மனிஷா பன்சால் பாதல் மற்றும் வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் கே.ஜே. சீனிவாசா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் எண்ணிக்கையை 2028-29 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 600 மையங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே வேளையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருடாந்திர வாடிக்கையாளர் தளத்தை 35 லட்சத்திலிருந்து 1 கோடியாக விரிவுபடுத்துகிறது.

2017 இல் தொடங்கப்பட்ட தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் சேவை 1.52 கோடிக்கும் அதிகமான குடிமக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வெகுவாக எளிதாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT