இணையச் சேவை  
இந்தியா

ஹரியாணாவில் 11 கிராமங்களில் இணையச் சேவை முடக்கம்!

விவசாயிகள் பேரணியால் ஷம்பு எல்லையில் பதற்றம்..

DIN

ஹரியாணாவின் அம்பாலா மாவட்டத்தின் 11 கிராமங்களில் டிசம்பர் 9 வரை இணையச் சேவை மற்றும் அதிக குறுஞ்செய்தி அனுப்பும் சேவைகளை தடைசெய்துள்ளது.

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள விவசாயிகள் ஷம்பு எல்லையிலிருந்து தில்லி நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர்.

ஷம்பு எல்லையிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி நடைப்பயணமாகச் செல்ல திட்டமிட்ட நிலையில், ஹரியாணா எல்லையில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகளின் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வரம் தரும் வாரம்!

இந்த நிலையில், ஹரியாணாவில் பதற்றத்தைத் தணிக்கும்வகையில், அம்பாலாவின் டாங்டேஹ்ரி, லோஹ்கர், மனக்பூர், தடியானா, பாரி கெல், லார்ஸ், கலு மஜ்ரா, தேவி நகர், சத்தோபூர், சுல்தான்பூர் மற்றும் கக்ரு ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டது.

கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) சுமிதா மிஸ்ரா பிறப்பித்த உத்தரவின்படி, டிசம்பர் 9 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அம்பாலா மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT