இந்தியா

அம்பேத்கர் நினைவு நாள்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் மரியாதை!

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் , பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை.

DIN

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று(டிச. 6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அமைப்பினர் அவருக்கு இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.

அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி . பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது ராகுல் காந்தி அம்பேத்கரின் உருவப் படத்திற்கு கீழே அரசமைப்புப் புத்தகத்தை வைத்து வணங்கினார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயோத்திபோல தமிழ்நாடு? பாஜகவுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

கோவை, நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இரவு உணவு இடைவேளை: 511 ரன்கள் குவித்த ஆஸி.! மீளுமா இங்கிலாந்து?

காவியம்... அனன்யா!

தமிழகத்தில் டிச.12 வரை மிதமான மழை!

SCROLL FOR NEXT