உயிரிழந்த ரேவதி. X
இந்தியா

எனக்கு வாழ்வளித்தவர்.. இன்று இல்லை! புஷ்பா - 2 நெரிசலில் சிக்கி பலியான பெண்ணின் கணவர்!

எனக்கு வாழ்வளித்தவர்.. இன்று இல்லை! புஷ்பா - 2 நெரிசலில் சிக்கி பலியான பெண்ணின் கணவர்!

DIN

ஹைதராபாத்: புஷ்பா - 2 திரைப்படம் பார்க்க சிறப்புக் காட்சிக்கு வந்திருந்த அல்லு அர்ஜூனை நெருங்க ரசிகர்கள் முயன்றபோது நேரிட்ட கூட்டத்தில் சிக்கி பலியான ரேவதியின் கணவர் மொகடம்பள்ளி பாஸ்கர் தனது மனைவி பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

டிசம்பர் 4 ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி பரிதாபமாக பலியானார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பா திரைப்படம் வந்த போது, அதனை குடும்பத்துடன் பார்த்தோம். அது முதல் எனது மனைவியும் மகனும் அல்லு அர்ஜூன் ரசிகராகிவிட்டார்கள்.

தற்போது புஷ்பா 2 படம் வரும்போது என் மகனும் மகளும் முதல் காட்சியைப் பார்க்க மிகவும் ஆசைப்பட்டனர். அந்த ஆசைதான் இன்று என் குடும்பத்தையே உலுக்கிவிட்டது என்று கதறுகிறார் பாஸ்கர். குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற வந்துதான் என் மனைவி உயிரையே இழந்துள்ளார் என்று கூறி அழுகிறார்.

திரைப்படம் பார்க்க வந்த இடத்தில், மனைவியை இழந்து, குழந்தை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், சொல்லொணாத் துயரத்தில் இருக்கும் பாஸ்கர் கூறுகையில், அவள்தான் எனக்கு வாழ்வளித்தவர். இன்று அவரே என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். கடந்த 2023ஆம் ஆண்டு எனக்கு கல்லீரல் பிரச்னை ஏற்பட்டபோது, அவர்தான் தனது பாதி கல்லீரலை எனக்கு தானமாக அளித்து உயிரைக் காப்பாற்றினார். இப்போது கூட தன் மகனைக் காப்பாற்றும் முயற்சின்போதுதான் அவரை உயிரை இழந்திருக்கிறார் என்று கூறுகிறார் கண்ணீர் மல்க.

இரவு திரையரங்குக்கு எனது மகள் மற்றும் மகனுடன் வந்திருந்தோம். கூட்டம் அதிகமாக இருந்ததால், மகள் அழத் தொடங்கிவிட்டார். எனவே, திரையரங்குக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் மகளை விடுவதற்காகச் சென்றேன். அவரை விட்டுவிட்டு வந்த போது மனைவியும் மகனும் நான் விட்டுவிட்டுச் சென்ற இடத்தில் இல்லை. உடனே அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட போது, ரேவதி போனை எடுத்து திரையரங்குக்குள் இருப்பதாகக் கூறினார். அதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. அதன் பிறகு அவரை நான் பார்க்கவேயில்லை. என் குழந்தையையும் மனைவியையும் தேடிய போது சிலர் கொடுத்த தகவலின்பேரில்தான் மருத்துவமனைக்கு வந்தேன். குழந்தையைப் பார்த்தேன். அவர் நெரிசலில் சிக்கி மிக மோசமான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அதிகாலை 3 மணி வரை என் மனைவிக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அப்போதான் காவலர்கள் என்னிடம் வந்து ரேவதி இறந்துவிட்டதைச் சொன்னார்கள். அப்போது என் உலகமே இடிந்து என் தலை மீது விழுந்ததைப் போல உணர்ந்தேன்.

மனைவியின் உடலைப் பெறுவதற்காக பிணவறையில் காத்திருந்த பாஸ்கர், தனது மகனை நினைத்து அழுவதா, எதுவும் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் மகளை நினைத்து அழுவதா அல்லது ஒட்டுமொத்த குடும்பத்தையும் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று தன்னை நினைத்து அழுவதா என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறை இசைக் கலைஞருக்கு பாராட்டு

திருபுவனம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழக எம்பி-க்கள்ஆதரிக்க வேண்டும்: ஹெச். ராஜா

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூரில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT