இந்தியா

லக்னௌ: ரயிலில் அடிபட்டு காவல் உதவி ஆய்வாளர் பலி

லக்னௌவில் ரயிலில் அடிபட்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளரின் சடலம் மீட்கப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

DIN

லக்னௌவில் ரயிலில் அடிபட்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளரின் சடலம் மீட்கப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், மஜ்கவன் கிராமத்திற்கு அருகே புதன்கிழமை மதியம் 2 மணியளவில் நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டது குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்திருக்கிறது.

தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை அடையாளம் காண முயன்றனர்.

ஆனால் உடலை அடையாளம் கண்டறிய முடியவில்லை என காவல்துறையினர் கூறினர். பிறகு அந்த உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒடிசாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்காக காத்திருப்பு

இதனிடையே ரயில் விபத்தில் பலியானவர் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் தியான் சிங் என வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டதாக கூடுதல் துணை காவல் ஆணையர் (தெற்கு) ராஜேஷ் குமார் யாதவ் தெரிவித்தார்.

அவர் லக்னௌவில் உள்ள காவல் தலைமையகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

SCROLL FOR NEXT