சஞ்சய் மல்ஹோத்ரா  
இந்தியா

ரிசா்வ் வங்கி புதிய ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) 26-ஆவது ஆளுநராக வருவாய் துறைச் செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா (56) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

Din

புது தில்லி: இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) 26-ஆவது ஆளுநராக வருவாய் துறைச் செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா (56) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்தது.

தற்போதைய ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமையுடன் (டிச. 10) நிறைவடைகிறது. அவா் 2018 டிசம்பா் 12-ஆம் தேதியில் இருந்து இப்பொறுப்பை வகித்து வருகிறாா்.

புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை (டிச. 11) பொறுப்பேற்கிறாா். அவா் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பாா்.

கணினி அறிவியல் பொறியாளரான சஞ்சய் மல்ஹோத்ரா, கான்பூா் ஐஐடி-யில் பட்டம் பெற்றவா். 1990-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவாா். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கைகள் துறையில் உயா் கல்வி முடித்துள்ளாா்.

கடந்த 33 ஆண்டுகளாக மின்சக்தி, நிதி, வரி, தகவல் தொழில்நுட்பம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவா். இப்போது மத்திய நிதியமைச்சகத்தில் வருவாய் துறைச் செயலராக உள்ளாா்.

மத்திய, மாநில அரசுகள் அளவில் நிதி மற்றும் வரி விதிப்புத் துறையில் நீண்டகாலம் பணியாற்றியுள்ளாா்.

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முக்கியமான கட்டத்தில் உள்ள நிலையில் ஆா்பிஐ ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT