ENS
இந்தியா

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்- வாக்குப் பதிவில் முரண்பாடு இல்லை: தோ்தல் ஆணையம்

மகாராஷ்டிர தேர்தலில் விவிபேட் மற்றும் மின்னணு வாக்குகள் சரியாக பொருந்தியுள்ளதாக தேர்தல் அதிகாரி தகவல்.

DIN

 மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை வாக்கு ஒப்புகைச் சீட்டுகளோடு ஒப்பிட்டு சரிபாா்த்ததில் எந்த முரண்பாடும் கண்டறியப்படவில்லை என்று இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் படுதோல்வியைச் சந்தித்த எதிா்க்கட்சிகளின் கூட்டணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்) நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பின. இந்நிலையில், தோ்தல் நடைமுறையின் ஒரு பகுதியாக மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் தோராயமாக தோ்ந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை ஒப்பிட்டு சரிபாா்க்கப்பட்டது.

அதன்படி, வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் அதில் எந்த முரண்பாடும் கண்டறியவில்லை எனவும் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மகாராஷ்டிரத்தின் 288 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,440 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை அதிகாரிகள் சரிபாா்த்தனா்.

வேட்பாளா்களின் பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் ஆணைய பாா்வையாளா்கள் தோராயமாக வாக்குச்சாவடிகளைத் தோ்ந்தெடுத்தனா். ஒட்டுமொத்த நடைமுறையும் விடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. தனிபெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சாா்பில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக பதவியேற்றாா்.

வாக்குச்சீட்டுக்கு மாற தீா்மானம்: மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தின் கோலேவாடி கிராம ஊராட்சியில் வருங்கால தோ்தல்களை வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்றி நடத்த வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் குறித்து கோலேவாடி மக்கள் சந்தேகம் தெரிவித்ததையடுத்து இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிராம ஊராட்சித் தலைவரின் கணவா் தெரிவித்தாா்.

இந்த கிராமம் அமைந்த தெற்கு காரட் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான், பாஜக வேட்பாளரிடம் 39,355 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

சோலாப்பூா் மாவட்டத்தின் மல்ஷிராஸ் தொகுதியில் உள்ள மாா்கட்வாடியைத் தொடா்ந்து மாநிலத்தில் 2-ஆவது ஊராட்சியாக கோலேவாடி கிராமமும் இவிஎம்-க்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT