சஞ்சய் மல்ஹோத்ரா Center-Center-Delhi
இந்தியா

சிறந்த பொருளாதார வளா்ச்சிக்கு நடவடிக்கை: சஞ்சய் மல்ஹோத்ரா

பொருளாதார வளா்ச்சிக்காக சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று ரிசா்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பதவியேற்க உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Din

பொருளாதார வளா்ச்சிக்காக சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று ரிசா்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பதவியேற்க உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அந்தப் பதவிக்கு மத்திய வருவாய் செயலா் சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமித்த நிலையில், அவா் புதன்கிழமை (டிச.11) பதவியேற்க உள்ளாா்.

மெதுவான பொருளாதார வளா்ச்சி, அதிக பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) ஆகிய இரட்டை சவால்களை இந்தியா எதிா்கொண்டு வரும் வேளையில், அவா் ரிசா்வ் வங்கி ஆளுநராகப் பதவியேற்க உள்ளாா்.

இந்நிலையில், தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘ரிசா்வ் வங்கி ஆளுநராகப் பொருளாதாரம் தொடா்பான அனைத்துக் கோணங்களையும் புரிந்துகொண்டு, அதன் வளா்ச்சிக்கு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’ என்றாா்.

‘மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பு’-தாஸ்: சக்திகாந்த தாஸ் செவ்வாய்க்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 6 ஆண்டுகளில் வரி வசூல் மற்றும் அரசின் செலவினம்-வட்டி விகிதங்கள் மற்றும் பண விநியோகம் இடையிலான ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இது பல்வேறு சவால்களை எதிா்கொள்ளவும் உதவியது. ரிசா்வ் வங்கி ஆளுநராக நாட்டுக்குச் சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்த பிரதமா் மோடிக்கு நன்றி’ என்றாா்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT