பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 6ஜி திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்லில் 6ஜி திட்டமும் உள்ளது என்றார்.
முன்னதாக கடந்த அக்டோபரில் தில்லியில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 6ஜி சேவையில் இந்தியா முன்னோடியாகத் திகழும் என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் அமைச்சர் டாக்டர் பெம்மசனி சந்திர சேகர் தெரிவித்திருப்பதாவது, ‘பிஎஸ்என்எல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ள ‘4ஜி சேவையளிக்கும் ஒரு லட்சம் சாதனங்களை’ நாடெங்கிலும் நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த வடிவமைப்பு 5ஜி சேவைக்கும் மேம்படுத்தி பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இதையும் படிக்க: 6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்: மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா
நாட்டில் தொலைத்தொடர்பு சேவை இல்லாத கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு சேவையளிக்கும் அரசின் தொலைநோக்குத் திட்டங்களான, 4ஜி தன்னிறைவுத் திட்டம், லட்சத்தீவுகளில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு அமைத்தல் உள்ளிட்ட பிற திட்டங்களை இலக்காகக் கொண்டு பிஎஸ்என்எல் செயலாற்றுகிறது.
மேலும், செயல்பாட்டிலுள்ள பாரத்நெட் திட்டம் மத்திய அமைச்சரவையால கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டதன்மூலம், அதிவேக எஃப்டிடிஹெச் புதைவடம் வழியாக தொலைத்தொடர்பு சேவை கிராமப்புற பகுதிகளில் வழங்கிடவும், அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் ஒன்றரை கோடி எஃப்டிடிஹெச் இணைப்புகள் வழங்கிடவும் பிஎஸ்என்எல் மேற்பார்வையில் பணி நடைபெறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.