மல்லிகார்ஜுன கார்கே  
இந்தியா

ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!

மாநிலங்களவை தலைவரால் தான் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுகிறது

DIN

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கார்கே கூறுகையில்,

1952 முதல் 67வது அரசியல் சாசன பிரிவின் கீழ் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. மாநிலங்களவை தலைவரின் செயல்பாடுகள் அந்தப் பதவியின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது.

அனுவம் வாய்ந்த தலைவரை பேசவிடாமல் தடுக்கிறார். ஆளுங்கட்சிக்குப் பேச வாய்ப்பளிக்கிறார். அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பள்ளி தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார். அவையில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்.

இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மாநிலங்களவை தலைவர் செயல்படுகிறார்.

மாநிலங்களவை தலைவரால் தான் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இன்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

காஷ்மீா் பிரிவினை கோரிக்கையை ஆதரிக்கும் அமெரிக்க கோடீஸ்வரா் ஜாா்ஜ் சோரஸுடன் காங்கிரஸ் தலைமைக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து மாநிலங்களவையில் திங்கள்கிழமை அக்கட்சி எம்.பி.க்கள் விவாதத்தை எழுப்பினா். அதேநேரத்தில், அதானி லஞ்ச புகாா் விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்தப் பிரச்னையை ஆளுங்கட்சி எழுப்புவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் விமா்சித்தனா்.

இவ்விவகாரம் தொடா்பான நோட்டீஸ்களை நிராகரித்தபோதும், எப்படி ஆளுங்கட்சி உறுப்பினா்கள் இந்தப் பிரச்னையை எழுப்ப அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் அனுமதிக்கிறாா் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவை தலைவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT