இந்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டடத்தில் ஐஇடி ரக வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு வியாழன் மிரட்டல் வந்துள்ளது.
ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட மின்னஞ்சலில், அனுப்பியவர் கட்டடத்தில் ஐஇடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது ஐந்து நாட்களுக்குள் தொலைவிலிருந்து செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அனுப்பியவர் உக்ரைனுக்கான சகோதரத்துவ இயக்கத்தில் சேருமாறு ஆர்பிஐ ஆளுநரையும் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் அந்த வளாகத்தில் சோதனை நடத்தியதாகவும், ஆனால் சந்தேகப்படும்படியான எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து தெற்கு மும்பையில் உள்ள மாதா ரமாபாய் அம்பேத்கர் மர்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
முன்னதாக இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் ரிசர்வ் வங்கிக்கு கடந்த மாதமும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.