முகப்பு
இந்தியா

இலங்கை அதிபரை வரவேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகவை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

Updated On : 16 டிசம்பர், 2024 at 5:59 AM
இலங்கை அதிபருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.
பகிர்:

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகவை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றிபெற்று, அந்நாட்டின் புதிய அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்றாா். இதைத்தொடா்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அக்டோபரில் இலங்கை சென்றாா்.

அப்போது அவா் அநுர குமாரவை சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தாா்.

பத்திரிகையாளரை சந்தித்து மன்னிப்பு கேட்ட பிரபல தெலுங்கு நடிகர்!

இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார். அவரை தில்லி விமான நிலையித்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

இந்தப் பயணத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரை சந்திக்கும் அநுர குமார, தில்லியில் வா்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க உள்ளாா்.

மேலும் பிகாரில் உள்ள புத்த கயைக்கும் செல்ல உள்ளாா். அதிபராக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணமாக அநுர குமார இந்தியா வந்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →