ரயில் மறியல் கோப்புப்படம்
இந்தியா

விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு!

பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருப்பது பற்றி...

DIN

தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் புதன்கிழமை பிற்பகலில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் நாளை பகல் 12 முதல் 3 மணி வரை அனைத்து ரயில்களையும் விவசாயிகள் நிறுத்த வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பாந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

பஞ்சாப்-ஹரியாணா எல்லையான ஷம்புவிலிருந்து டிச. 14ஆம் தேதி மூன்றாவது முறையாக சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லி நோக்கி நடைபயணத்தை மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளை தடுத்து நிறுத்திய ஹரியாணா காவல்துறை, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதில் காயமடைந்த விவசாயிகள் டிராக்டரில் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே, 20 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவா உடல்நிலை மோசமடைந்துள்ளார்.

இந்த நிலையில், ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்த சர்வன் சிங் பேசியதாவது:

“நேற்று வாகனப் பேரணிக்கு ஆதரவளித்த அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜக்ஜித் சிங் தலேவாவின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு ஏதேனும் நேரிட்டால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

மோடி அரசு பிடிவாதமாக இருக்கிறது. எங்களின் கோரிக்கைகளை நசுக்குவதில் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து விவசாயிகளின் குரலை நசுக்குகிறார்கள்.

நாளை பகல் 12 முதல் 3 மணி வரை ரயில் மறியல் போராட்டத்துக்கு பஞ்சாப் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்

தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

ரோபோ சங்கர் மறைவு: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

SCROLL FOR NEXT