இந்தியா

வறுமை, வேலையின்மையால் வாடும் மக்களுக்கான திட்டங்களைத் தொடங்க வேண்டும்: மாயாவதி

வறுமை, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் சில திட்டங்களை உத்தரப் பிரதேச அரசு தொடங்க வேண்டும்

DIN

லக்னௌ: வறுமை, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் சில திட்டங்களை உத்தரப் பிரதேச அரசு தொடங்க வேண்டும் என்று புதன்கிழமை உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வறுமை, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி சில திட்டங்களை உத்தரப் பிரதேச அரசு தொடங்க வேண்டும்.

மேலும் தற்போது மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும், அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அது அவர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி மற்றும் நிவாரணம் அளிப்பதாக இருக்கும். இது பகுஜன் சமாஜ் கட்சியின் சிறப்பு வேண்டுகோள் என அவர் கூறியுள்ளார்.

403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

விஜய்யை சந்தித்தது உண்மை : உ.பி. உடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை - பிரவீன் சக்கரவர்த்தி

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்... அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

நீ ஒரு கோழை.. துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

தினந்தோறும் 17 முறை நிவேதனம் அளிக்கப்படும் கிருஷ்ணர் கோயில்!

SCROLL FOR NEXT