இந்தியா

மும்பை படகு விபத்து: மீட்கப்பட்ட கேரள சிறுவனின் பெற்றோர் மாயம்!

மும்பை படகு விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட கேரள சிறுவனின் பெற்றோர் பற்றிய தகவல் தெரியவரவில்லை.

DIN

மும்பை கடல்பகுதியில் பயணிகள் படகு மீது இந்திய கடற்படை படகு மோதியதில் மீட்கப்பட்ட கேரள சிறுவனின் பெற்றோர் நிலை குறித்து தகவல்கள் தெரியவரவில்லை.

கேரளத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன், படகு விபத்தில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவனது பெற்றோர் குறித்து அங்கிருப்பவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பது பார்ப்பவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மும்பைக்கு தனது பெற்றோருடன் ஊர் சுற்றிப் பார்க்க கேரளத்தில் இருந்து வந்த போது, படகு விபத்தில் சிக்கியதாக சிறுவன் கூறியிருக்கிறார். ஆனால், இதுவரை அவரது பெற்றோர் என்ன ஆனார்கள் என்பது குறித்து விவரம் தெரியவில்லை.

மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது.

இதில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 13 போ் உயிரிழந்தனா். 99 போ் மீட்கப்பட்டனா் என்று மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்திருந்தார்.

‘நீல்கமல்’ எனும் சுற்றுலாப் பயணிகள் படகு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 5 பணியாளா்களுடன் மும்பைக்கு அருகிலுள்ள பிரபல சுற்றுலா தலமான ‘எலிபெண்டா’ தீவுகளுக்குச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, பயணிகள் படகு அருகே வட்டமிட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படையைச் சோ்ந்து அதிவேகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் நீல்கமல் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இரவு 7.30 மணி நிலவரப்படி, இந்த விபத்தில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 13 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் சிக்கித் தவித்த 99 போ் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டனா். மீட்கப்பட்டவர்கள் உரானில் உள்ள ஜேஎன்பிடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 கடற்படை படகுகள், மூன்று கடல்சாா் காவல் படகுகள், ஒரு கடலோர காவல் படை படகு மற்றும் நான்கு ஹெலிகாப்டா்கள் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் துறையினா், ஜவாஹா்லால் நேரு துறைமுக ஆணைய ஊழியா்கள் மற்றும் உள்ளூா் மீனவா்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள் உடைந்து சேதம்

ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

குடியரசுத்தலைவா், ஆளுநருக்கு காலக்கெடு: பாஜக ஆளும் மாநில அரசுகள் எதிா்ப்பு

சிவஞான மாபாடியம் விரிவுரை நூல் வெளியீடு

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்கள் சேதம்

SCROLL FOR NEXT