ஜெய்ப்பூர் பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே பயங்கர தீ PTI
இந்தியா

ஜெய்ப்பூர்: ரசாயன லாரி மோதியதில் 30 வாகனங்கள் எரிந்தது; 5 பேர் பலி!

ஜெய்ப்பூர் பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பற்றி...

DIN

ஜெய்ப்பூர் பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே ரசாயன லாரி மோதியதில் 30 லாரிகள் உள்பட பல வாகனங்களில் தீ பிடித்தது.

வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், 5 பேர் பலியாகியுள்ளனர், 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மாநில முதல்வர் பஜன்லால் சர்மா கேட்டறிந்தார்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றிலும் 3 பெட்ரோல் நிலையங்கள் இருப்பதால் அசாதாரண சூழல் நிலவுவதாக தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீ பிடித்து எரியும் வாகனங்களுக்கு அருகில் வீரர்களால் செல்ல முடியவில்லை என்றும், நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT