இந்தியா

கடும் பனிமூட்டம்: தில்லியின் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ்!

தில்லியில் இன்று(சனிக்கிழமை) காலை வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.

DIN

தில்லியில் இன்று(சனிக்கிழமை) காலை வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.

தில்லியில் கோடைக் காலங்களில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில், சமீபமாக வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது.

தில்லியில் கடந்த டிச. 12 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சில இடங்களில் 4 டிகிரி செல்சியஸைவிடவும் குறைவாக பதிவானது.

இதனால் தில்லியில் குளிர் அலை உருவாகியுள்ளது. இன்றும் தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் பனி மூட்டம் காணப்படுகிறது.

தில்லியில் இன்று(சனிக்கிழமை) காலை வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் உள்ளது. காற்று தரக்குறியீடு இன்று காலை 8 மணிக்கு 395 ஆகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT