பிரதாப் சந்திர சாரங்கியிடம் நலம் விசாரிக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ANI
இந்தியா

நாடாளுமன்றத்தில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் குணமடைந்தனர்!

நாடாளுமன்றத்தில் காயமடைந்த எம்பிக்கள் குணமடைந்தது பற்றி..

DIN

நாடாளுமன்ற தள்ளுமுள்ளில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செல்லும் வழியை மறைத்து பாஜக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பாஜக எம்.பி.க்கள் தள்ளியதில் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைரும் காங்கிரஸ் தேசியத் தலைவருமான 82 வயது மல்லிகாா்ஜுன காா்கே நிலைதடுமாறி தரையில் அமா்ந்ததாகத் தெரிகிறது. அதுபோல, காங்கிரஸ் எம்.பி.க்கள் தள்ளியதில் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நெற்றிப் பகுதியில் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படும் எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியை சக எம்.பி.க்கள் சக்கர நாற்காலியில் அமரவைத்தபடி அழைத்துச் சென்று, ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

பாஜக எம்.பி.க்கள் காயமடைந்ததற்கு ராகுல் காந்தி தள்ளியதே காரணம் என்று பாஜக எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினா். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி.க்கள் மறுத்தனா். பாஜகவினரின் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியும் மறுத்தாா். இந்தக் கைகலப்பு தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் தரப்பிலும், மல்லிகாா்ஜுன காா்கேயை தாக்கியதாக பாஜக எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோா் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரின் உடல்நிலையும் நிலையாக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT