முகப்பு
கோப்புப் படம்
இந்தியா

மத்திய பட்ஜெட்: 2025 பிப். 1, சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும்!

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நாளான சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

மத்திய பட்ஜெட்: 2025 பிப். 1, சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும்!

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நாளான சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 டிசம்பர், 2024 at 1:21 PM
கோப்புப் படம்
பகிர்:

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நாளான சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. வழக்கமாக வார இறுதி நாள்கான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை செயல்படாது. திங்கள் - வெள்ளி வரையிலான வார நாள்களில் மட்டுமே செயல்படும்.

இதனால், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியாத நிலை முதலீட்டாளர்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் 2025 பிப்ரவரி 1 ஆம் தேதியன்று வர்த்தகத்திற்காக பங்குச் சந்தை திறந்திருக்கும் என்று தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) அறிவித்துள்ளன.

இதற்கு முன்பு 2020, 2015 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளுக்கும் வார இறுதி நாளையும் பொருட்படுத்தாது பங்குச் சந்தை இயங்கியது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பிப்ரவரி 1 -ல் தனது 8 வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இதையும் படிக்க | தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனம்!

முழு கட்டுரையைப் படிக்க →