இலங்கை வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.237 கோடி- இந்திய அரசு ஒதுக்கீடு
இலங்கையில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா ரூ.237.1 கோடி ஒதுக்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா ரூ.237.1 கோடி ஒதுக்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 33 வளா்ச்சித் திட்டப் பணிகள் இந்த நிதியுதவி மூலம் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த இலங்கை சுகாதார அமைச்சரும், அமைச்சரவை செய்தித் தொடா்பாளருமான நளிந்தா ஜெதிஸ்சா இது தொடா்பாக மேலும் கூறுகையில், ‘இந்தியா - இலங்கை இடையிலான இருதரப்பு சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடா்பாக இரு நாடுகள் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கல்விப் பணிகளுக்காக ரூ.31.5 கோடி, சுகாதாரப் பணிகளுக்கு ரூ.78 கோடி, வேளாண்மைத் துறைக்கு ரூ.62 கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. உள்ளூா் மக்களின் உள்கட்டமைப்பு வசதி, வளா்ச்சி மற்றும் வாழ்க்கைத்தரம் உள்ளிட்டவை இத்திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்படும்’ என்றாா்.