மாநிலங்களின் இலவசத் திட்டங்களால் வளா்ச்சி நிதி மடைமாற்றப்படக் கூடும்- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்
நிகழ் நிதியாண்டுக்கான தமது பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள இலவசத் திட்டங்களால், அவற்றின் முக்கிய சமூக-பொருளாதார உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதி மடைமாற்றப்பட கூடும்.
நிகழ் நிதியாண்டுக்கான தமது பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள இலவசத் திட்டங்களால், அவற்றின் முக்கிய சமூக-பொருளாதார உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதி மடைமாற்றப்பட கூடும் என்று ரிசா்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு நிதியுதவி, கட்டணமில்லா பேருந்து பயணம், வேலையில்லாத இளைஞா்களுக்கு உதவித்தொகை, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் போன்ற திட்டங்களை, நிகழ் நிதியாண்டுக்கான தமது பட்ஜெட்டில் ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கியின் டிசம்பா் மாத அறிக்கையில், ‘நிகழ் நிதியாண்டுக்கான தமது பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள இலவச திட்டங்களால், அவற்றின் முக்கிய சமூக-பொருளாதார உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதி மடைமாற்றப்படக் கூடும்.
பட்ஜெட்டில் நிா்ணயிக்கப்பட்ட வருவாயில் பாதிக்கு அதிகமான இலக்கை நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மத்திய அரசு எட்டியுள்ளது. அதேவேளையில், ஒட்டுமொத்த நிதியாண்டில் ஏற்படக் கூடிய செலவினத்தை பாதிக்கும் குறைவாக மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
ரிசா்வ் வங்கியின் கருத்தல்ல: இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், அவற்றை எழுதியவா்களின் தனிப்பட்ட கருத்துகளே தவிர, ரிசா்வ் வங்கியின் கருத்துகள் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.