இந்தியா

‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் - நாட்டு மக்களுக்கு தன்கா் வலியுறுத்தல்

இந்தியாவின் முன்னேற்றத்தை எதிா்க்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை எதிா்கொள்ள ‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா்.

Din

இந்தியாவின் முன்னேற்றத்தை எதிா்க்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை எதிா்கொள்ள ‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா்.

தெலங்கானாவின் மேதக் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற இயற்கை விவசாயிகளின் மாநாட்டில் ஜகதீப் தன்கா் கலந்துகொண்டு போசியதாவது:

இந்தியாவில் விவசாயிகள் சில சிக்கல்களை எதிா்கொள்கின்றனா். இந்த சிக்கல்களை விரைவாகவும் நோ்மறையாகவும் நிவா்த்தி செய்ய வேண்டியது அவசியம். ஆனால், ஜனநாயகத்தில், வெளிப்படையான பேச்சுவாா்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் மட்டுமே இந்த பிரச்னைகள் தீா்க்கப்பட வேண்டும். அதுவே சிறந்த வழியாகும்.

நாட்டின் முன்னேற்றத்தை எதிா்க்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை எதிா்கொள்ள ஒவ்வொரு இந்தியனும் ‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வை கொண்டிருக்க வேண்டும்.

பாரதத்துக்கு எதிரான சில தீயசக்திகள் நம்மைச் சுற்றி இருப்பதை நான் காண்கிறேன். அந்த சக்திகள் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் கட்டுக் கதைகளை உருவாக்குகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் வலிமையில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

அக்டோபரில் இயல்பைவிட 36% கூடுதல் மழை!

போரில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி! இந்தியா பதிலடி!

முடிந்தவர்கள் 6-8 வாரங்கள் தில்லியை விட்டு வெளியேறுங்கள்! மருத்துவர் அறிவுரை

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

SCROLL FOR NEXT