விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி -60 
இந்தியா

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி -60!

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (டிச. 30) விண்ணில் செலுத்தப்பட்டது.

DIN

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (டிச. 30) விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று இரவு 8.85 மணிக்குத் தொடங்கியது.

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் போயம் - 4 எனப்படும் நான்காம் நிலையில் இந்த ஆய்வுக் கருவிகள் உள்ளன.

இதில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ தயாரித்தவை. எஞ்சிய 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்தவை.

ஸ்பேடெக்ஸ் திட்டம்

இந்திய ஆய்வு மையத்தை 2035 - க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலில் தனியாா் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்தன.

இதையும் படிக்க | பி.எஸ்.எல்.வி. சி -60: விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்தன - இஸ்ரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT