முகப்பு
இந்தியா

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 0.5% சரிவு!

2024 - ன் கடைசி நாளிலும் பங்குச் சந்தை வணிகம் இன்று சரிவுடன் தொடங்கியது.

Updated On : 31 டிசம்பர், 2024 at 6:33 AM
பகிர்:

2024 ஆம் ஆண்டின் கடைசி நாளிலும் பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 452 புள்ளிகள் சரிவுடன் வணிகம் ஆரம்பமானது.

வணிக நேரத் தொடக்கத்தில் 426 புள்ளிகள் சரிவுடன் சென்செக்ஸ் வணிகம் தொடங்கியது.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 247.62 புள்ளிகள் சரிந்து 78,000.51 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது. மொத்த வணிகத்தில் இது 0.30 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73.95 புள்ளிகள் சரிந்து 23,570.95 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது. இது மொத்த வணிகத்தில் 0.85 சதவீதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 20 நிறுவனங்கள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக கோட்டாக் வங்கி 2.36%, சன் பார்மா 1.17%, டாடா மோட்டார்ஸ் 0.55%, எஸ்பிஐ 0.5%, ஐடிசி 0.42%, எல்&டி 0.41%, டாடா ஸ்டீல் 0.28% உயர்ந்திருந்தன.

இதேபோன்று டெக் மஹிந்திரா -2.50%, டிசிஎஸ் -2.14%, இன்ஃபோசிஸ் -1.5%, சோமேட்டோ -1.36%, பஜாஜ் ஃபின்சர் -0.92% சரிந்திருந்தன.

நிஃப்டியைப் பொறுத்தவரை 23,560.60 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது. இது நேற்றைய வணிகத்தை விட சரிவாகும். 12 மணியளவில் 23,611.95 என்ற இன்றைய உச்சத்தையும் பதிவு செய்தது.

நிஃப்டி பட்டியலில் உள 50 தரப் பங்குகளில் பஜாஜ் ஹோல்டிங்ஸ், அதானி வில்மர், ஈஸி ட்ரிப், கோத்ரேஜ், அதானி கிரீன், ஐநாக்ஸ் விண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவில் இருந்தன.

ரிட்ஸ், காட்ஃபிரே பிலிப்ஸ், சென்னை பெட்ரோ, டொரெண்ட் பவர், டெடிங்டன் உள்ளிட்டவை ஆதாயப் பட்டியலில் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →